போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு - பெண் போலீசார் அதிரடி.!!
women police rakhi band to trafic violator
போக்குவரத்து விதிமீறல்களை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து பெண் போலீசார் ராக்கி கட்டிய சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பணிக்கு வந்திருந்த பெண் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ராக்கி கயிறு கட்டி நூதன முறையில் செயல்பட்டனர்.

அதாவது, ஹெல்மெட் அணியாமல் இருத்தல், சிக்னல் தாண்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள். மேலும், அவர்களது கையில் சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தி தேசியக்கொடியையும் வழங்கினர்.
தொடர்ந்து விதிகளை மீறி வாகனம் ஒட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அதனை, போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.
English Summary
women police rakhi band to trafic violator