பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
1 kilogram of hidden cannabis seized youth arrested
திருநெல்வேலியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் பல்வேறு யுத்திகளை கையாண்டு நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளனர். இருந்த போதிலும் ஆங்காங்கே கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இப்படி போதை பொருட்களை கடத்தி ஒரு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த வாலி வரை போலீசார் மடக்கி பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த குப்பகுறிச்சி, தெற்கு தெருவை சேர்ந்த மகாராஜன் என்பவரை போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகாராஜனை சீவலப்பேரி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இதையடுத்து மகாராஜனை வழக்கு பதிவு செய்து போலீசார் நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
English Summary
1 kilogram of hidden cannabis seized youth arrested