ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கணும்..! இல்லையென்றால்...தேர்தல் ஆணையம் அதிரடி.!!
election commission order ragul gandhi apologize
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாகவும், போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என்று அடுக்கடுக்கான புகார்களை கூறி ஆவணங்களையும் வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. மேலும், தனது குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
ஆனால், அதனை ராகுல் காந்தி மறுத்துவிட்டார். இது குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
English Summary
election commission order ragul gandhi apologize