ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 'ஆட்டு ஈரல்' சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
goat liver eating health benefits tamil
ஆட்டு ஈரல் சத்தான உணவுகளில் ஒன்று. இதில் உள்ள வைட்டமின் ஏ, பி, காப்பர், இரும்புச்சத்து, போலிக் அமிலம் உடலை வலுவாக வைத்துக் கொள்ளும். ஒருவேளை சாப்பிட்டால் ஒரு நாளைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் தர முடியும்.
ஆட்டு ஈரல் அடிக்கடி சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது. ஆட்டு ஈரலில் வரும் இரும்புச்சத்து, வைட்டமின் பி1 அதிக அளவில் உள்ளதால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

ஆட்டு ஈரலில் உள்ள வைட்டமின் கே எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கு முக்கியமானது. வைட்டமின் கே கால்சியத்தை உறிஞ்சி எலும்பு தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்து மிகச் சிறந்த உணவாக உள்ளது.
இதில் உள்ள வைட்டமின் ஏ சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது. பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களின் வைட்டமின் ஏ உள்ளது. ஏனெனில் இது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அழகாக இருக்க வேண்டும் என்றால் ஆட்டு ஈரல் அடிக்கடி சாப்பிடுங்கள்.
ஆட்டு ஈரலில் வைட்டமின் பி, இரும்பு சத்து மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பது மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும். சோர்வு மற்றும் உடல் பலவீனத்தை போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
English Summary
goat liver eating health benefits tamil