அடிக்கடி சிறுநீர் கழித்தல்; சொட்டு சொட்டாக வெளியேறுதல் போன்ற அறிகுறிகள்; ஆண்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்..! - Seithipunal
Seithipunal


ஆண்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல், முழுமையாக சிறுநீர் வெளியேற்றிய உணர்வு ஏற்படாதது போன்றவை பினைன் புரோஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியாவின் அறிகுறிகள் மருத்துவர் கு.கணேசன் என்பவர் தெரிவித்துள்ளார். 

40 வயதைக் கடந்த ஆண்கள் பலருக்கு புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைதான் பினைன் புரோஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியா (Benign Prostatic Hyperplasia).

இந்த புரோஸ்டேட் என்பது ஆண்களுக்கு உள்ள ஒரு பாலியல் சுரப்பியாகும். ஒருவரின் வயது, பரம்பரைக் காரணிகள், வாழ்க்கை முறை போன்றவை புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. குறித்த பிரச்சினை 04 நிலைகளாக இருக்கும். 

இதில் முதல் மூன்று நிலைகள் மாத்திரைகளிலேயே சரியாகிவிடும் என்றும், நான்காம் நிலைக்கு லேசர் சிகிச்சை அல்லது டர்ப் (TURP) அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் மருத்துவர் கு.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு Benign Prostatic Hyperplasia பிரச்சினை உள்ளவர்கள் சிறுநீரை அடக்கிவைத்திருப்பது, அளவுக்கு அதிகமாக டீ காபி குடிப்பது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பகல் நேரத்தில் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், மாலை நேரத்துக்குப் பிறகு குறைந்த அளவே தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

அத்துடன், காரமான, எண்ணெய்த்தன்மை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கும்படியும், கேரட், தக்காளி, கீரைகள், பழங்கள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுநீர் கழிப்பதில் தொடர்ந்து ஏதேனும் மாற்றம் அல்லது அசௌகரியம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Doctors warn men about symptoms like frequent urination and dribbling


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->