சாத்துக்குடி ஜூசா? என்று சலிப்புடன் கேட்கும் நபர்களுக்கு..!! அருமை தெரியாமல் அலட்சியத்துடன் இருக்காதீர்கள்.!!
daily to drink sathukudi juice to gain more health
தினமும் பல்வேறு விதமான பணி சூழலின் காரணமாக நமது உடலின் சத்துக்களை இழந்து வருகிறோம். இழந்த சத்துக்களை மீட்பதற்காக சத்துள்ள பழ வகைகள் மற்றும் பழ சாறுகளை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலின் சத்துக்களை மீட்டு வருகிறோம். அந்த வகையில்., சாத்துக்குடி பழத்தின் சாறில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
சாத்துக்குடி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களின் காரணமாக நமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு., உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது. நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைப்பதோடு., நார்சத்தின் காரணமாக செரிமானம் சரியாக நடந்து வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்படுகிறது.

இதன் மூலமாக எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று எலும்புகளை வலுப்படுத்தி., வயதான தோற்றம் ஏற்படும் பிரச்சனையை குறைகிறது. இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம்., மினரல்கள் மற்றும் பாஸ்பிரஸ் சத்துக்களின் காரணமாக நமது உடலுக்கு பெரும்பாலான நன்மைகள் கிடக்கிறது. இதன் மூலமாக உடலுக்கு புதிய இரத்தமானது உற்பத்தி ஆகிறது.
உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாவதால் உடல் அலுப்பானது சரியாகிறது. இதன் காரணமாக நோய் வாய்பட்டவர்களுக்கு சாத்துக்குடி பழச்சரானது வழங்கப்படுகிறது. இதனால் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு., இரத்த சோகை பிரச்சனையானது சரி செய்யப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாத்துக்குடி பழச்சாறை கண்டிப்பாக அருந்த வேண்டும்.

இதன் மூலமாக சிறு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி., எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு எலும்பு பிரச்சனையை சரி செய்வதற்கும்., பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான பிரச்சனைகளை சரி செய்வதற்கும்., ஞாபக மறதி பிரச்னையை சரி செய்வதற்கும் உதவுகிறது. பசியின்மை பிரச்சனை இருப்பார்கள்., சீரான சக்தியை அதிகரிப்பதற்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணப்படுத்துகிறது.
English Summary
daily to drink sathukudi juice to gain more health