'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பணியாற்றிய தமிழக வீரர் மரணம்: முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதில் சுற்றுலா பயணிகள் மீதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதன் போது பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்.

இந்த ஆபரேஷன் சிந்தூரில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரணும் பணியாற்றினார்.  கடந்த8 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் சரணுக்கு  திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், சரண் தற்போது காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி பணியில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சரணின் உடல் நேற்று சொந்த ஊரான முத்துசாமிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu soldier Saran who served in Operation Sindhur passes away


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->