எல்லைகளில் மீண்டும் பதற்றமான சூழல்: வானில் பாகிஸ்தான் டிரோன்கள் வட்டமடிப்பு: இந்திய ராணுவம் உசார்..!
Indian Army reports Pakistani drones circling Jammu and Kashmir border
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே பாகிஸ்தானின் டிரோன்கள் வட்ட மடித்துள்ளதை அடுத்து அங்கு ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ராணுவத்தினரின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் 06 டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்ட பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இவ்வாறான டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அத்துடன், எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
English Summary
Indian Army reports Pakistani drones circling Jammu and Kashmir border