'சென்னையில் மின் கம்பி வழித்தடங்களை ஆய்வு செய்ய சரி செய்ய வேண்டும்': பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடந்த 23-ந் தேதி சென்னை கண்ணகி நகர் பகுதியில் தூய்மை பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலட்சுமி என்ற பெண், பணிக்கு செல்வதற்காக கண்ணகி நகர் 11 வது குறுக்கு தெருவில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மழை காரணமாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரில், மின்சார வயரில் இருந்து மின்சாரம் கசிந்து வரலட்சுமி மீது பாய்ந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மின் கம்பி பூமிக்கு வெளியே தெரியாமல் இருக்குமாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பூமிக்கு வெளியே மின் கம்பிகள் இருந்தால் 04 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் எனவும் மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electricity Department orders engineers to inspect and repair power lines in Chennai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->