குடலிறக்கம் ஏற்பட காரணங்கள் மற்றும் காக்கும் முறைகள்...!
Causes of hernia and methods of prevention
குடலிறக்கம் என்றால் என்ன?
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு. குடலிறக்கம் ஏற்படும் பகுதி வயிறு ஆகும்.
காரணங்கள் :
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும்.
இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரும்.

அவ்வாறு குடலிறக்கம் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
குடலிறக்கம் வந்தபின் காக்கும் முறைகள் :
பெரும்பாலான பிள்ளைகளுக்கு தொப்புள் சார்ந்த குடலிறக்கம் இருக்கும். இதற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது. ஆனால், பெரிதாக இருந்தால் அல்லது தானாகவே மறையாவிட்டால் அறுவைச் சிகிச்சை செய்யலாம்.
அறுவைச் சிகிச்சையின்போது, சிறு குடல், அல்லது வேறு உறுப்பு அல்லது திசு, அதன் சரியான இடத்துக்குத் தள்ளி வைக்கப்படும்.
வேறொரு குடலிறக்கம் அல்லது பலவீனத்திற்காக, அறுவை மருத்துவர் கவட்டின் மறுபக்கத்தையும் பரிசோதிப்பார்.
English Summary
Causes of hernia and methods of prevention