இந்த விஷயம் தெரிந்தால் கட்டாயம் பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வீர்கள்..!! - Seithipunal
Seithipunal


பாகற்காய் கசப்பு சுவை உடையாதாக இருப்பதால் பலர் அதைனை ஒதுக்கி வைப்பர். ஆனால் வெண்டைக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பாகற்காயை கூட்டு, பொரியல், குழம்பு, சிப்ஸ் என பல்வேறு வழிகள் மூலம் உணவில் சேர்த்து கொண்டாலும், அதன் ஜுஸை நேரசியாக அருந்துவது பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. பாகற்காய் ஜூஸ்ஸில்  இருக்கும்  நன்மைகள் என்னவேன பார்போம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியம் : ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிப்பது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும். நீரழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸ் அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

கேன்சர் தடுப்பு :  கசப்பு பூசணி என்று குறிப்பிடப்படும் பாகற்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு ஒவ்வாமை மற்றும் தொற்றிலிருந்து தடுக்கும் குணம் கொண்ட பாகற்காய் முக்கியமாக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.  மார்பக புற்றுநோய் பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்துகளை பாகற்காய் ஜூஸ் குறைக்கிறது.

எடை இழப்பு: குறைவான கலோரி மற்றும் ஃபைபர் சத்து நிறைந்திருப்பதால் பாகற்காய் ஜூஸ் அருந்துவது எடை இழப்பிற்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலினுள் இருக்கும் நச்சு தன்மையை குறைக்கும்.

வைரஸ் தடுப்பு பண்புகள் : கொடிய எச்.ஐ.வி.யின் அறிகுறிகளான வொயிட் ஸ்பாட் சின்ட்ரோம் மற்றும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (human immunodeficiency virus) போன்ற வைரஸ் நோய்களை ஆகியவற்றை எதிர்த்து போராட பாகற்காய் ஜூஸ் கட்டுபடுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bitter gourd juice advantages


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal