மூக்கிரட்டை செடி என்ற மருத்துவ மூலிகை.. உடலின் சகல பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.!! - Seithipunal
Seithipunal


மூக்கிரட்டை செடி என்ற மூலிகை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. நமது உடலில் ஏற்படும் சிறு பிரச்சனைகளில் இருந்து, பெருவாரியான பிரச்சனைகளை தீர்க்க இந்த செடி நமக்கு பேருதவியாக இருக்கும். இனி அதன் பலன்களை நாம் காணலாம். 

1. மூக்கிரட்டை செடி நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுவதுமாக வெளியேற்றி, உடல் நலத்தை காக்கும் வல்லமை கொண்டது. இந்த செடியை நாம் சாப்பிட்ட பின்னர் உறங்கும் நேரங்களில் தனது பணியை செய்ய தொடங்குகிறது. 

2. இதனால் வாத வியாதிகள் அடங்கி உடலில் வாதப்பிரச்சனை சரியாகும். இரத்த சோகை பிரச்சனை ஏற்பட்டு உடல் வீக்கம், மூச்சிரைப்பு போக்கவும், கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலை பிரச்சனையை குணப்படுத்தவும் மூக்கிரட்டை உதவி செய்கிறது.  

3. புற்றுநோயை ஏற்படுத்தவல்ல நச்சுக்கிருமிகளை அழித்து, தொற்று வியாதிகள் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளும். உடலில் இருக்கும் திசுக்களை சரி செய்து உடலின் முதுமைத்தன்மையை போக்கி இளமையை தக்க வைக்கும். நமது மூளைக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலுக்கு சுறுசுறுப்பை வழங்கி, மனதை உற்சாகப்படுத்தும். 

4. பொன்னாங்கன்னி இலை, மூக்கிரட்டை இலை, கீழாநெல்லி இலைகள் போன்றவற்றை ஒரே அளவில் எடுத்து, நன்கு அரைத்து சிறிதளவு மோரில் சேர்த்து தினமும் குடித்து வந்தால் கலங்கலான பார்வை குறைபாடு பிரச்சனை மற்றும் வெள்ளெழுத்து குறைபாடு பிரச்சனை சரியாகும். 

5. சிறுகுறிஞ்சான், மூக்கிரட்டை, நெருஞ்சில், சீரகம், மிளகு மற்றும் திப்பிலி போன்றவற்றை சமமான அளவு எடுத்து, அனைத்தையும் காய வைத்து தூளாக்கி தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். 

6. மூக்கிரட்டை சமூலம் என்ற முழு செடியையும் உலர்த்தி தூளாக்கி தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மூக்கிரட்டை இலையை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வந்தால் சுவாச பிரச்சனை சரியாகும். 

7. மூக்கிரட்டை வேர்கள் நீளமாக மற்றும் சிறிய அளவிலான மரவள்ளிக்கிழங்கு போல இருக்கும். இது இரத்த சோகை மற்றும் இதய பாதிப்புகள் போன்ற பிரச்சனையை சரி செய்கிறது. மூக்கிரட்டை வேரினை நீரில் சேர்த்து கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்த சோகை மற்றும் சளித்தொல்லை பிரச்சனையில் இருந்து விலக்கம் கிடைக்கும்.

8. மூக்கிரட்டை வேரை காயவைத்து இடித்து விளக்கெண்ணெயில் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகும். இதனால் உடலில் இருந்த நச்சு நீர் மற்றும் நச்சு கிருமிகள் மலத்துடன் வெளியேறும். நாள்பட்ட நச்சுக்களும், சரும வியாதிகளும், அரிப்பு போன்ற பிரச்சனைகளும் குணமாகும். 

9. உணவினால் உடலில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும் நேரங்களில், உலர்த்திய மூக்கிரட்டை வேரினை இடித்து காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு தினமும் 2 வேளை குடித்து வந்தால் ஒவ்வாமையால் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். 

10. நச்சு நீர், சளி, மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் மூக்கிரட்டை வேரினை நீரில் இட்டு, சிறிதளவு நயம் மிளகுத்தூளை சேர்த்து (வீட்டில் தயார் செய்யப்படும் சுத்தமான மிளகுத்தூள்) கொதிக்க வைத்து குடிக்கலாம். 

11. சிறுநீரக பாதிப்பால் இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரித்து சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை போன்றவை ஏற்படும். இதனை கட்டுக்குள் கொண்டு வரவும், தவிர்க்கவும், சிறுநீர் அடைப்பை சரி செய்யவும் மூக்கிரட்டை வேருடன் சோம்பு சேர்த்து காய்ச்சி ஆறவைத்து தினமும் குடிக்கலாம். இதனால் பக்க விளைவுகள் இன்றி சிறுநீரக பிரச்சனை அனைத்தும் சரியாகும். 

12. மூக்கிரட்டை மலக்குடலை சுத்தம் செய்து உடல் நச்சுக்களை வெளியேற்றும். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றாலும், அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. உடலுக்கு நன்மையே.. பயம் கொள்ள வேண்டாம். மூக்கிரட்டை வேரை பொடியாக்கி தேனில் கலந்து தினமும் இரண்டு வேளை சிறிதளவு சாப்பிட கண்பார்வை குறைபாடு பிரச்சனை சரியாகும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Mookirattai Sedi


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal