பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!
Benefits of jackfruit
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவைக்கு வேற எதுவும் ஈடு இணையில்லை. தோல் பகுதி கரடு முரடாக இருந்தாலும் உள்பகுதி மிகுந்த சுவையுடன் இருக்கும்.
பலாப்பழம் அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளது.
மேலும், பலாப்பழத்தில் பொட்டாசியம் கால்சியம், துத்தநாகம் கொண்ட சத்துக்களும் அடங்கியுள்ளது.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா நோய் வராமல் தடுப்பதோடு ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.

குழந்தைகளுக்கு பலாப்பழம் மிகவும் நல்லது பலாப்பழம் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகிறது.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் இது ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட். அதன் காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால் தைராய்டு குணமாகும் மேலும் இது உடலுக்கு தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.