என்னென்ன கீரை சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் தெரியுமா.? மொத்த லிஸ்ட் இதோ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு வகையான கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. கீரைகளில் இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் நிறைந்துள்ளது. அதன்படி, கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலத்தை பெறலாம். அதன்படி எந்தெந்த கீரைகள் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

அகத்திக்கீரை

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். உடல் சூட்டை குறைக்கும். வயிற்றுப்புண் பித்தத்தை குறைக்கும்.

அப்பக்கோவை கீரை

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

அம்மான் பச்சைக் கீரை

தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.

கரிசலாங்கண்ணி கீரை

சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது.

அரைக்கீரை

ஆண்மை தன்மையை அதிகரிக்கிறது.

கறிவேப்பிலை கீரை

தலை சுற்றுதல் நீங்கும். கண் பார்வை தெளிவாக தெரியும்.

கற்பூரவள்ளி கீரை

பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்.

கீழாநெல்லி கீரை

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்துகிறது.

குப்பை கீரை

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துகிறது.

குமுட்டி கீரை

சர்க்கரை அளவை குறைக்கிறது.

கொத்தமல்லி கீரை

வயிற்று பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

சோம்பு கீரை

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது.

தண்டுக்கீரை

குடல் புண்களை ஆற்றி, மலச்சிக்கலை சரி செய்கிறது.

தூதுவளைக் கீரை

ஆண்மை தன்மையை அதிகரிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நாயுருவி கீரை

நரம்புகளை வலுவாக்குகிறது.

பசலைக் கீரை

புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.

பண்ணைக்கீரை

உடல் சோர்வை நீக்குகிறது.

பாலக்கீரை

ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

பிரண்டைக் கீரை

செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

புதினாக்கீரை

ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.

புளிச்சக்கீரை

ஆண்மை அதிகரிக்கும் மற்றும் மாலைக்கண் நோயை குணப்படுத்துகிறது.

பொன்னாங்கண்ணிக் கீரை

கண் பார்வையை தெளிவாக வைக்கிறது.

மணத்தக்காளி கீரை

அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.

முடக்கத்தான் கீரை

கை மற்றும் கால்களின் செயலிழப்பை குணப்படுத்துகிறது.

முருங்கைக் கீரை

கண்பார்வையை தெளிவாக்கி, உடலுக்கு வலுக்கொடுக்கிறது.

வல்லாரைக் கீரை

ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

வெந்தயக்கீரை

மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. மேலும் மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலப்படுத்துகிறது.‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of eating spinach full list


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->