நிலநடுக்கம்... அதன் வகைகள் என்ன? கண்டறியும் கருவி எது? - Seithipunal
Seithipunal


ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரிய நகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன. பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும், அசையாமலும் இருப்ப‍தால் தானே இக்கட்டிடங்கள் விழுந்து விடாமல் நிலைத்து நிற்கின்றன.

ஆனால் அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வ‍ப்போது நிலநடுக்கம் எனப்படும் பூகம்பம் ஏற்பட்டு பெருத்த‍ளவில் சேதங்கள் உண்டாகின்றன.

அந்தவகையில் இனிவரும் பகுதியில் நிலநடுக்கம் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நிலநடுக்கம் :

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டானிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால் அளக்கப்படுகிறது. 

நிலநடுக்கத்தின் வகைகள் : 

டெக்டானிக் நிலநடுக்கம் - இவை டெக்டானிக்தட்டுகள் நகர்வதால் ஏற்படுகிறது.

எரிமலை நிலநடுக்கம் - எரிமலை வெடிப்பின் பொழுது ஏற்படும் நிலநடுக்கம்.

சரிவு நிலநடுக்கம் - நிலத்தடி குகை மற்றும் சுரங்கங்களில் ஏற்படுவது.

சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சாமந்த்ர அசைவு முறை இவற்றில் சாதாரண முறை மற்றும் சாமந்த்ர அசைவு முறையில் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மேற்தள்ளல் முறை அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும்.

நிலநடுக்கத்தின் அளவை கண்டறியும் கருவி :

நிலஅதிர்வு அலைகளின் வீச்சு மற்றும் அதிர்வெண் நிலநடுக்கமானி என்ற கருவியினால் கணக்கிடப்படுகிறது. இது நிலநடுக்கத்தின் அளவு மற்றும் சிறு அதிர்வையும் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் கண்டறியும் அளவுகள் ரிக்டர் அளவில் குறிப்பிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake types


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal