அரசியல் லாபத்திற்காக திமுகவின் இரட்டை நாக்கு பேச்சு! இதெல்லாம் இவரை யாரு பேச சொன்னா? ஸ்டாலின் பேச்சால் கடுப்பான திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


மோடி டெல்லிக்கு வந்துவிட்டார் என்பதற்காக 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை இந்திய நாடு இன்னும் மறக்கவில்லை - அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

தற்போது பாஜக கூட்டணியில் இல்லை என்பதால் பாஜகவை எதிர்த்து இந்த விவகாரத்தினை பேசிவிட்டார் ஸ்டாலின். ஆனால் இதே குஜராத் விவகாரத்தில் அவருடைய தந்தை என்ன பேசினார் என்பதனை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என திமுகவினர் புலம்பி வருகின்றனர். 

கடந்த 2002 ஆம் ஆண்டு அயோத்தி விவகாரம் தொடர்பாக ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. குஜராத்தில் நடந்த வன்முறைக்கு காரணமே குஜராத் அரசு தான் என்று சில எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் அப்போது பாஜக கூட்டணியில் இருந்த திமுக, பாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்திருந்த திமுகவின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, குஜராத்தில் கலவரம் நடந்திருப்பது மிக வேதனையான விஷயம்.ஆனால் இந்தக் கலவரத்தை யாரும் அரசியலாக்காதீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும் என பேசியிருந்தார். 

அன்றைய அரசியல் லாபத்துக்காக அரசியல் ஆக்காதீர்கள் என கருணாநிதி அன்று தெரிவித்த நிலையில், இன்றைய அரசியல் லாபத்துக்காக குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை இந்திய நாடு இன்னும் மறக்கவில்லை - அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கூட்டத்திற்கு வந்த திமுகவினர் இவருக்கு பாஜகவை எதிர்த்து பேச வேறு விஷயமே இல்லையா, இதெல்லாம் யார் எழுதி கொடுக்கிறார்கள், அப்போது மௌனம் காத்துவிட்டு, அரசியலுக்காக இப்படியா மாற்றி மாற்றி பேசுவது எனவும், இப்போது விமர்சனம் செய்தால் எதிர்க்கட்சிகள் நம்மை விமர்சனம் செய்யாத என புலம்பியவாரே கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Leader stalin speak about Gujarat violence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->