அரியலூர் இளைஞர்களே... இது உங்களுக்காக… மிஸ் பண்ணிடாதிங்க…!!
Tomorrow private employment camp in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும் நகர்புறத்திலுள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.
நடைபெறும் இடம்: அரியலூர் அரசினர் கலைக் கல்லூரி
கல்வி தகுதி:
5 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல்.
வயது: 18 முதல் 45 வயது வரை
• இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் 10000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுடன் கலந்து கொள்ள உள்ளனர்.
• மேலும், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 20 க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்பினை வழங்க உள்ளார்கள்.
• இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது சுய விபர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow private employment camp in Ariyalur