புதுக்கோட்டை இளைஞர்களே ரெடியா.! இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! மிஸ் பண்ணிடாதீங்க..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. 

இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

மேலும், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today private employment camp in Pudukkottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->