காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - யாருக்கு? எப்போது?
today last date to temporary teacher post vacancis
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - யாருக்கு? எப்போது?
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தலைமையாசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியரை கொண்டு நிரப்பப்படும். இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்களுக்கு ரூ.12,000 மும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000 மும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000 -மும் வழங்கப்படும்.
தற்காலிகமாக ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுவதால் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் ஏப்ரல் 2024ம் ஆண்டு வரையிலும் பணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சரியான ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் முலமாகவோ அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நிலையில் 2 காலிப் பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் நிலையில் 3 காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் நிலையில் 37 காலிப்பணியிடங்களும் உள்ளன. இதற்கு மாதாந்திர தொகுப்பூதியமாக முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 வழங்கப்படும்.
வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today last date to temporary teacher post vacancis