சிவகங்கை இளைஞர்களே! இது உங்களுக்காக.. ஏப்.21 வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க..! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஒவ்வொரு மாதமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2-ம் மற்றும் 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 21-ந்தேதி காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுனர்கள் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம். 

கல்வி தகுதி:

•10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 

•ஐ.டி.ஐ., 

•டிப்ளமோ

படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

•முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. 

•மேலும் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும். 

•இம்முகாமில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivagangai district Employment camp on April 21


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->