இந்த வருஷம் ஆல்-பாஸ்க்கு வாய்ப்பில்லை., ஒவ்வொரு மாதமும் தேர்வு., அதிரடி முடிவை எடுத்த கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வுகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி -கல்லூரி மாணவர்களின் படிப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடி, ஆடி படிக்க வேண்டிய வயதில் வீட்டிலேயே முடங்கி கிடைப்பதால் மனதளவிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

னாய் தொற்றுப்பரவல் காரணமாக 2019 -2020 ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் 2020 -2021 ஆம் கல்வி ஆண்டிலும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் இது போல் அரசு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனால்,  முன்னேற்பாடாக புதிய முறையை கையாள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி, வரும் காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் இந்த அலகு தேர்வை நடத்தி, அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அலகு தேர்வு நடத்துவதன் மூலம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து கணக்கிட்டு தேர்வு முடிவை அறிவிக்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new way to eam for school board exam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->