நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக மாணவர்கள் சாதனை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மே 4ஆம் தேதி நடைபெற்ற 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இத்தேர்வை 22.7 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

557 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகளை மாணவர்கள் [www.neet.nta.nic.in](http://www.neet.nta.nic.in) இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி உள்ளது.

நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட துறை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் ராணுவக் கல்லூரி நர்சிங் படிப்புகளுக்கும் இது கட்டாயத் தேர்வாகும்.

மாணவர்களின் விடைத்தாள்கள் மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகள் இணையத்தில் வெளியிடப்பட்டு, அதற்கான பதில்களுக்குப் பின்னர் இறுதி விடைகுறிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், முடிவுகள் வெளியானதில் தமிழக மாணவர்கள் சிறப்பான சாதனை புரிந்துள்ளனர். தேசிய ரேங்கில் முதல் 100 இடங்களில் 6 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களது தரவரிசைகள்: 26, 50, 61, 63, 78, 88.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET Result 2025 tamilnadu student record


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->