போலீஸ் வேடத்தில் வந்த மர்மநபரால் அமெரிக்கா சட்டசபை உறுப்பினர் மற்றும் அவரது கணவர் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமடைந்து வந்த, மர்மநபர் திடீரென அவர்களது வீடுகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் பலத்த காயம் அடைந்துள்ளார். மிகவும்  ஆபத்தான நிலையில் உள்ள இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதோடு, சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை தேடும் பணியை தீவிரமாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தியவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த  துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 'இது போன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது', என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மினசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றும், இந்த தாக்குதல் நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் டிம். வால்ஸ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US Assembly Member Shot and Killed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->