12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே வேலை.!
job vacancy in tirunelveli districts
திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கவும்.
பணியிடம் : உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 9
இந்த வேலைக்கு குறித்த மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
English Summary
job vacancy in tirunelveli districts