சுய தொழில் செய்ய விருப்பமா?.! கை கொடுக்கும் சாக்லேட் தயாரிப்பு..!! - Seithipunal
Seithipunal


இல்லதரசிகள் வீட்டில் இருந்தே தொழில் செய்ய வேண்டும் என விரும்புவர். அவர்கள் செய்ய சுயதொழில்கள் எண்ணிடங்கானவை உள்ளது. அதில் ஒன்று தான் சாக்லேட் தயாரிப்பு தொழில். வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்போம்.

இடவசதி, முதலீடு:

நீங்கள் இதனை ஓய்வு நேரங்களில் மட்டும் செய்ய நினைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய அறை போதுமானது. மேலும் ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக ரூ. 200 முதல் 300 ரூபாய்க்கு குறைவாகவே செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன பிறகு chocolate mold tray அவசியம் இந்த தொழிலுக்கு தேவைப்படும்.

இந்த அச்சுகள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மூலப்பொருளாக சர்க்கரை, உணவு வண்ணம், சோள கருதினால் செய்யப்பட்ட பாகு (corn syrup) அல்லது cough syrup, பேக்கிங் கவர் ஆகியன ஆகும்.

எப்படி செய்வது:

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் சர்க்கரைக்கு 3 ஸ்பூன் என்ற அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு உணவுக்கான வண்ணம்( food colour) ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை தனியாக எடுத்து பேக்கிங் செய்து,. பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.

சந்தை:

இப்படி செய்யும் சாக்லேட்டை ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இந்த வகை சாக்லேட்டுகள் கிலோ ரூபாய் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Home made Chocolates


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->