முழு விவரங்கள் மதியம் 2 மணி முதல்...! - 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்
Full details from 2 pm 11th standard public examination results
தமிழ்நாடு முழுவதும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வில் 92.09 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 % மற்றும் மாணவிகள் 95.13 % தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முதலிடம் பெற்ற மாநிலமாக அரியலூர் மாவட்டம் உள்ளது.
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 5 இடங்கள்:
- அரியலூர் மாவட்டம் 97.8% முதலிடம்,
- ஈரோடு மாவட்டம் 97%,
- விருதுநகர் மாவட்டம் 96.2%,
- கோவை மாவட்டம் 95.8%,
- தூத்துக்குடி மாவட்டம் 95.1%
பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Full details from 2 pm 11th standard public examination results