இனி பள்ளி கட்டணம் யு.பி.ஐ. மூலம் மட்டுமே... மத்திய அரசு அதிரடி!
Central govt UPI School fees
மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பள்ளி கட்டண முறையில் நவீன மாற்றத்தை கொண்டு வருமாறு மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான சுற்றறிக்கையில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட தொகைகளை இனிமேல் பணமாக பெறாமல், டிஜிட்டல் வழிகளில் மட்டுமே பெறுமாறு மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, யு.பி.ஐ., மொபைல் வாலட், நெட்பேங்கிங் போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளின் மூலம் கட்டணத்தை வசூலிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், பள்ளி கட்டண வசூலில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே எளிதாக கட்டணத்தை செலுத்தும் வசதி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வும், அதற்கான பயன்பாட்டும் அதிகரிக்கும் என மத்திய கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கிறது.
மொத்தத்தில், இந்த நடவடிக்கை கல்வி துறையில் பண பரிவர்த்தனையை எளிதாக்கி, ஊழல் தடுப்பு மற்றும் நேர்மையான கணக்கீடு ஆகியவற்றை உறுதிசெய்யும் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Central govt UPI School fees