திருமணம்... தெய்வங்கள் சாட்சியாக.... தாரை வார்த்தல்.! - Seithipunal
Seithipunal


தாரை வார்த்தல் :

திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது தாரைவார்த்தல். தாரை என்றால் நீர் என பொருள். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர்.

தாரை வார்த்த பின்பு தான் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான். என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் என மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு-மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி.

எனவேதான், மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை இருக்கும்.

இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும். உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப் பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.

கும்பம் வைத்தல் :

கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம்.

இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரம், உடம்பின் தோல், நூல், நாடி நரம்புகள், குடம், தசை, தண்ணீர், இரத்தம், நவரத்தினங்கள், எலும்பு, தேங்காய், தலை மாவிலை, தலைமயிர், தருப்பை, குடுமி, மந்திரம் மற்றும் உயிர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

ஹோமம் வளர்த்தல் :

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.

ஹோமத்தின் மூலம் நவகிரகங்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது.

ஹோமப்புகை உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tharai varththal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->