நான்கு நூற்றாண்டுகள், பல அரசுகள், பல மன்னர்கள் உருவாக்கிய அதிசயம்! மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்! காணதவறாதீர்கள்!
நான்கு நூற்றாண்டுகள், பல அரசுகள், பல மன்னர்கள் உருவாக்கிய அதிசயம்! மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்! காணதவறாதீர்கள்!

முதலில் கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டில் காட்டியது. அதற்கு அவர்கள் காலத்தில் அவர்களுடன் நட்பாக இருந்த சோழர்கள் விளக்கு எரிக்க தானம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பின் குலோத்துங்க சோழர் தானம் கொடுத்திருக்கிறார். அதன் பின்பு ஹொய்சாளர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அவர்கள் சில மண்டபம் கட்டி விரிவு படுத்திருக்கிறார்கள். அதன் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வந்த விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்களும் தங்கள் பங்குக்கு ஆன சில பணிகளை செய்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு கால கட்டத்திலும் வேலை செய்த கலைஞர்கள் அவர்களால் எவ்வளவு அதிகபட்சம் நேர்த்த்தியும் துல்லியமும் உழைப்பையும் கொட்டமுடியுமோ கொட்டியிருக்கிறார்கள். கருவறை முன்பு ஹொய்சாளர்கள் கட்டுமானத்தில் உருவான திருக்கல்யாண மண்டபத்தை கலையார்வம் உள்ள எவரும் கண்டவுடன் கடந்து வந்து விட முடியாது.


ஒவ்வொரு அரசாட்சியும் அதன் கலை வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இருக்கும் இந்த கோவில் வெறும் புத்தக வாசிப்பாக சோழர்கள் பற்றி அறிவதற்கும் கர்நாடகாவின் தலைநகர் அருகே கல்வெட்டு சான்றுகளோடு நின்று கொண்டிருக்கும் கோவிலை தொட்டு தடவி உடல் சிலிர்ப்பதும் வெவ்வேறு விதமான அனுபவம். அந்த அனுபவத்தை நீங்களும் பெறுவதற்கு நீங்களும் கர்நாடக மாநிலம் சிக்பெலபுரா பயணப்படுங்கள்.

படங்களும், கட்டுரையும் : வரலாற்று ஆய்வாளர் பராந்தகன் தமிழ்செல்வம்.
English Summary
karnataka sigbelapura temple