சேலத்தில் சோகம்! செல்போன் விளையாட்டு கண்டிப்பு…! - 11 வயது மாணவன் தற்கொலை
Tragedy Salem reprimand over playing mobile phone games 11 year old student commits suicide
சேலம் அருகேயுள்ள திருமலைகிரி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் தீனா (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தான்.
இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் தீனா சேலையால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த தகவலறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தீனா வீட்டில் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
Tragedy Salem reprimand over playing mobile phone games 11 year old student commits suicide