காதலின் பெயரில் கொலை! மும்பை இளைஞர் படுகொலை வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை..! முழு விவரம் வேண்டுமா...?
Murder name love 3 people sentenced prison Mumbai youth murder case Want full details
மும்பையைச் சேர்ந்த இம்தியாஸ் மற்றும் அண்டாஃபில் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாத்திமா இடையே 2015-ஆம் ஆண்டு நட்புறவு உருவாகியது. இருவரும் தொடர்ந்து பேசி பழகிக் கொண்டிருந்த நிலையில், இதை அறிந்த பாத்திமாவின் அண்ணன் சாந்த் சேக் கடும் கோபம் கொண்டு, இம்தியாசை நேரடியாக சந்தித்து தனது சகோதரியுடன் தொடர்பைக் கைவிடுமாறு எச்சரித்ததுடன், “மீண்டும் பேசினால் உயிருடன் விடமாட்டோம்” என மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இம்தியாஸ் பின்னடையாமல் மீண்டும் பாத்திமாவை சந்தித்தார். இதனால் ஆத்திரம் உச்சத்துக்கு சென்ற சாந்த் சேக், தனது சகோதரர் சதாம் மற்றும் தாய் சபீராவுடன் சேர்ந்து இம்தியாசை தாக்கத் திட்டமிட்டார். மூவரும் இணைந்து இம்தியாசை பிடித்து, மரணத்திற்கும் அப்பாற்பட்ட முறையில் தாக்கினர்.
தாக்குதலின் போது மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்த சாந்த் சேக், இம்தியாசை பலமுறை குத்தியதில் அவர் தீவிரமாக காயமடைந்தார்.அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இம்தியாஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சாந்த் சேக், சபீரா, சதாம் ஆகியோரை கைது செய்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.நீண்ட விசாரணையின் பின், மூவரும் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், நீதிபதி முக்கிய குற்றவாளியான சாந்த் சேக்கிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினார்.
மேலும், தாக்குதலில் உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சதாம் மற்றும் தாய் சபீரா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
English Summary
Murder name love 3 people sentenced prison Mumbai youth murder case Want full details