நண்பரின் மனைவியுடன் உல்லாசம்! சதி செயல் தீட்டி முடித்துக் கட்டிய நண்பன்...! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் கலபுரகி மாவட்டம் கமலாப்புரா தாலுகா நரோனா காவல் எல்லைக்கு உட்பட்ட முரடி கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதான அம்பரீஷ்.அதே பகுதியை சேர்ந்தவர் 29 வயதான தொழிலாளி அஜய். இருவரும் நண்பர்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் அம்பரீஷ், அடிக்கடி அஜயின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.அப்போது அஜயின் மனைவியுடன் அம்பரீசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.அஜய் இல்லாதபோது வீட்டுக்கு சென்ற அம்பரீஷ் நண்பரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதையறிந்த அஜய், அம்பரீசை கண்டித்தார். ஆனால் அவர் கேட்காமல் தனது மற்றொரு நண்பருடன் சேர்ந்து அம்பரீசை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.அவ்வகையில் சம்பவத்தன்று இரவு தனியாக பேசவேண்டும் என்று தெரிவித்து அஜய், அம்பரீசை, முரடி கிராமம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து அஜய், தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி தெரிவித்து தகராறு செய்துள்ளார். மேலும் அஜய், தனது நண்பருடன் சேர்ந்து, அம்பரீசை கத்தியால் குத்தி கொலை செய்தார்.அதன் பின்னர் இதுகுறித்து நரோனா காவலர்களுக்கு அஜயே தகவலளித்தார்.

அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு காவலர்கள் வந்து கீழே இருந்து கிடந்தவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், காவலர்கள் நடத்திய விசாரணையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அம்பரீசை கொன்றதாக அஜய் வாக்குமூலம் அளித்தார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அஜயின் நண்பர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவலர்கள்  வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Having fun with a friends wife friend who plotted and completed plot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->