"நான் தனியாள் இல்ல" சொல்லிட்டு யாருடனும் அஜித் சேராமல் தனித்து நிற்பதற்கான காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இதுவரது 62 ஆவது திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது. அவர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

திரைப்பட உலகில் அஜித் ஒரு தனித்துவமானவர். பெரும்பாலான திரை உலக பிரமுகர்கள் அவரை ஜென்டில்மேன் என்று அழைக்கின்றனர். மற்ற நடிகர்களைப் போல விருது வழங்கும் விழா, பாடல் வெளியீட்டு விழா, வெற்றி விழா என எதிலும் கலந்து கொள்ளாமல் ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்தால் தனக்கு விருப்பமான செயல்களை செய்ய கிளம்பி விடுவார். தற்போதும் துணிவு படம் வெளியானதை முன்னிட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு வந்து தனது பைக் டூர் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அஜித் தன்னை பொது விழாக்களிலிருந்து தனிமைப்படுத்தியதற்கான காரணத்தை தற்போது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது  வெளியாகி திரை உலகில் ட்ரண்ட் ஆகி வருகிறது. திரை உலக கலைஞர்களுக்கு ஆதரவாக அஜித் பேசியது தான் இன்று அவர் தனிமைப்படுத்தியதற்கான காரணம் என தெரிவித்திருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் திரையுலகினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் அஜித் துணிவுடன் பேசி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சினிமாவையும் அரசியலையும் கலக்க வேண்டாம் சில பிரமுகர்கள் எங்களை மிரட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கின்றனர். தயவு செய்து சினிமாவையும் அரசியலையும் ஒன்று சேர்க்காதீர்கள் என கருணாநிதி முன்பே அஜித் திரையுலகினருக்காக பேசியிருக்கிறார். அதன் பிறகு நடந்த நிகழ்வுகளுக்கு எந்த திரையுலகினரும் அஜித்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. இந்த காரணத்தால் தான் அவர்  திரையுலகினர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வையும் தவிர்த்து வருகிறார் என கூறியிருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the reason for Ajith standing alone shocking interview published by the journalist


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->