விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானுக்கு உதவிய பிரபலம்: வைரலாகும் பதிவு! - Seithipunal
Seithipunalவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷ்ணு விஷால் தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 

சென்னையில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக விஷ்ணு விஷால் வசித்து வரும் காரப்பாக்கத்திலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்த விஷ்ணு விஷால், தனக்கு உதவும் படி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் இருக்கும் வீட்டிற்கு சென்ற தமிழக தீயணைப்பு படையினர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி இருவரையும் மீட்டனர். 

எதிர்பாராத விதமாக பாலிவுட் நடிகர் அமீர் கானும் அதே பகுதியில் இருந்ததால் அவரையும் மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். அமீர்கான் சென்னையில் இருப்பது வேகமாக பரவத் தொடங்கியது. 

இதனை அடுத்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் வலைதளத்தில், 'நாங்கள் இருந்த நிலைமையை நண்பர் மூலம் அறிந்து கொண்ட அஜித் சார் எங்கள் வில்லாவைச் சேர்ந்த 30 பேருக்கும் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். 

எப்போதும் உதவும் மனப்பான்மையைக் கொண்டவர். லவ் யூ அஜித் சார்' என பதிவிட்டு அஜித்குமார் மற்றும் அமீர் கான் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். 

இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன நிலையில் நடிகர் அஜித்குமாரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishnu Vishal and Aamir Khan Helped Ajith


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->