அது முற்றிலும் பொய்யே! மான நஷ்ட வழக்கு தொடருவேன்! விஜய் ஆண்டனி எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்ற ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாஜகவினருக்கும், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் அந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளோடு யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியிடப்பட்டது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அந்த வீடியோ குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் "என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம், நான் இப்போது சிறு மனவேதனையுடன் இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி youtube சேனல் ஒன்றில் என்னையும், சகோதரர் ஏ.ஆர் ரகுமான் அவர்களையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.

அது முற்றிலும் பொய்யே! அந்த youtube சேனல் மீது நான் மானம் நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகையை அனைத்தையும் நடைபெற இந்த இசை துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்றும் அன்புடன் உங்கள் விஜய் ஆண்டனி" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Antony will file deformation case spread rumors related to ARRahman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->