நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டேன் - விஜய் ஆண்டனி உருக்கம்! - Seithipunal
Seithipunal


தன்னுடைய வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டதாக இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, நடிகைகள் மகிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அமுதனும் தானும் நீண்ட நாள் நண்பர்கள் என்றும், அவருடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு ‘ரத்தம்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு நேர்காணலில் விஜய் ஆண்டனி, ”தன்னுடைய வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டேன். இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், வாழ்க்கையில் அடுத்தது என் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட இழப்புகளின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்” என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antony speech about life


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->