தனது உடல்நலம் குறித்து விஜய் ஆண்டணியின் பதிவு.. ரசிகர்கள் ஆறுதல்.!  - Seithipunal
Seithipunal


பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து அவரே இயக்கி நடித்து வருகின்றார். இதில் காவியா தாப்பர் ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த ஜனவரி 16 இது குறித்த பாடல் காட்சிகள் சூட்டிங் நடந்து வந்தது. 

அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி மீது ஜெட் ஸ்கை வாகனம் மோதியது. இதில் விஜய் ஆண்டனி முகத்தில் படுகாயம் ஏற்பட அவரது பற்கள் உதடுகளில் பலத்த காயம் ஏற்பட்டது. நடிகை காவியா தாப்பர் எந்தவித காயமும் இல்லாமல் தப்பினார்.

பட குழு உடனே விஜய் ஆண்டனியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு திரும்பி தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்தார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "படப்பிடிப்பு காரணமாக தாடை மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது  அந்த விபத்தில் இருந்து இப்போது பாதுகாப்பாக மீண்டு வந்துள்ளேன்  ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. கூடிய விரைவில் அனைவரிடமும் பேசுவேன். என் உடல் நலம் பற்றி அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Antony About His accident


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->