சம்யுக்தாவை பங்கம் செய்யும் கமல்.! களைகட்டும் பிக்பாஸ் வீடு.!
Today biggboss promo
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 56வது நாளான இன்று கமல்ஹாசனின் வருகை உள்ளது. கடந்த 3 பிக்பாஸ் சீசன்களை போல அல்லாமல் இந்த 4வது சீசன் மிக வெறுப்பாக செல்கின்றது. மேலும், 56 நாட்கள் கடந்த பின்னர் கூட எப்படி விளையாட வேண்டும் என்பதை போட்டியாளர்களுக்கு வார வாரம் நடிகர் கமல் டிப்ஸ் என்ற பெயரில் சொல்லி விட்டு செல்கின்றார்.
இருப்பினும், ஆரம்பித்த இடத்திலேயே தான் போட்டியாளர்கள் அனைவரும் இருக்கின்றனர். அந்த வகையில் வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் என்ற லிஸ்டில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் நாமினேட் ஆகும் அளவிற்க்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆமை வேகத்தில் செல்கின்றது.
அதனை சரி செய்யும் வேலையை ஹவுஸ்மேட்ஸும் செய்ய தவறுவதால் அதை பிக் பாஸ் தற்போது தன்னுடைய கையில் எடுத்து இருக்கின்றார். கடந்த சில நாட்களாக கொளுத்தி போடும் அவர், ரசிகர்களை உற்சாகமூட்ட, குறும்படம் இரண்டை இந்த வாரம் ரெடியாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், சம்யுக்தா இந்த ஷோல வளர்ப்பு என்கிற வார்த்தையை எத்தனை முறை பயன்படுத்துனீங்க என்று கமல் கேட்க சம்யுக்தா நிறைய முறை என்று தெரிவிக்கிறார். அத்துடன் தன்னுடைய தாய்மை குறித்து ஆரி பேசியதாக சம்யுக்தா கூற அவர் ஒன்றும் தவறாக கூறவில்லை. குறும்படம் ஒன்னு பார்க்கலாமா? என்று கூற குறும்படம் ஒளிபரப்பாகும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.