இந்த வாரம் பிக் பாஸ்ஸில் வெளியேறுவது இவர் தானாம்? அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை  கமல் தொகுத்து வழங்கி வருகிறார். நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ் சீசன் மூன்றில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். 

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்களில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீது சர்ச்சைகள் அதிகமாக கிளம்பியுள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றபடவில்லை.

மேலும், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா உள்ளிட்ட மூன்று பேருக்கும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இந்த நிலையில் 75 நாட்களை நெருங்கி விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, ஷெரின், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் சேரனும், ஷெரினும் கடைசி இரண்டு இடத்தில் இருப்பதால் இந்த வாரம் சேரன் அல்லது ஷெரின் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது. ஷெரினை விட சேரன் கம்மியான ஓட்டுகள் பெற்றுள்ளதால் இதனால் சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this week elimination in bigboss


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal