'தளபதி 68'- ஜோதிகா-விஜய்? ஆர்வத்துடன் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் 'தளபதி 68' உருவாகியுள்ளது. நடிகர் விஜய் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு, நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த 'உடன்பிறப்பு' படம் ஜோதிகாவின் கடைசி திரைப்படம் ஆகும். தற்போது பிரபல மலையாள நடிகர் மம்முட்டியுடன் 'காதல்' என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார். 

தற்போது விஜய் உடன் இணைந்து 'தளபதி 68' படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜோதிகாவிடம் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கால் சீட் கொடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

நடிகர் விஜய்யுடன் ஜோதிகா 2000 மற்றும் 2003இல் குஷி மற்றும் திருமலை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

இந்த வெற்றி கூட்டணி 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் இணைந்து ஜோதிகா-விஜய் படமாக இருக்கும். இது உண்மையாக வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathi 68 Jyotika Vijay


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->