ஏன் அந்த மாதிரி பாட்டா போடுற.?! விஜய் டிவி டிஜேவை நேரடியா வெளுத்து வாங்கிய பூஜாவின் அம்மா.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் பாடகி பூஜா. இவருக்கு தொடர்ந்து காதல் அப்ரோச் கொடுத்து வருபவர் DJ பிளாக்.

பூஜா அந்த நிகழ்ச்சியின் மேடைக்கு வந்தாலே காதல் பாடல்கள், செட்டிங் டயலாக்குகள் என காதல் மழை பொழிய ஆரம்பித்து விடுவார் DJ பிளாக். இதனால் யூட்யூப் போன்ற வலைதளங்களில் DJ பிளாக் என்று  போட்டாலே அவற்றுடன் பூஜாவின் பெயரும் சஜஷனில் இணைந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது பூஜா அவருடைய குடும்பத்தினரை விழா மேடைக்கு அழைத்து வந்தார். அப்போது நமது DJ வழக்கம் போல் காதல் கமகமக்க டயலாக்குகளை ஒலிக்க விட்டார். இதில் கடுப்பான பூஜாவின் தாயார் DJ பிளாக்கை மேடையிலேயே விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக பேசிய பூஜாவின் தாயார் Dj பிளாக் என்று போட்டாலே பூஜாவின் பெயரும் சேர்ந்து வருவது  மிகவும் வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார். என்ன இருந்தாலும் பூஜா ஒரு பெண் பிள்ளை என்றும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது எனவும் அவர் மேடையில் வைத்து Dj பிளாக்கிடம் நேரடியாக தெரிவித்தார். DJ பிளாக் இது குறித்து பேசுகையில் நான் எல்லோருக்கும் போடுவது போல தான் பூஜா விற்கும் பாடல்களை போடுவதாக தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்து, அவரது தாயார் இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு நாசுக்காக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

super singer pooja mother scolding dj black on stage for flirting behaviour


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->