#சற்றுமுன்: எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது.! திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்! போலீஸ் குவிப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையானது கடந்த 14ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

இதையடுத்து, அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து கொரோனா நோயிலிருந்து மீண்ட நிலையில் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருடைய உடல்நிலை குணமாகி விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீரென பின்னடைவை சந்தித்து,  நேற்று மாலை அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவே இந்த பின்னடைவுக்கு காரணம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வரும் எஸ்.பி.பி.,யில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, எஸ்.பி.பி யை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பி., அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அமைந்தகரை எம்.ஜி.எம்., மருத்துவமனையில் பரபரப்பு யற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 

முன்னதாக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spb hospital police protection high


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->