இந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்துள்ள திமுக அமைச்சர் ரகுபதி; அண்ணாமலை காட்டம்..!
Annamalai condemned DMK minister Raghupathi stating that he has once again proven his anti Hindu mindset
முதல்வர் உட்பட திமுகவினர் பேச்சு, ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது என்றும், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதல்வர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.'' என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Annamalai condemned DMK minister Raghupathi stating that he has once again proven his anti Hindu mindset