"4 வார்த்தை பாராட்டி பேசுவதால் நாம் குறைந்து விட மாட்டோம்" - தேசிய திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சூரி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் திறனறிவு தேர்வு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை  மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும் அதே மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடிக்கும் வரை ஆண்டிற்கு 12000/- ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும்..

இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திறனறிவு தேர்வுகளில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதிலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த ஆறு மாணவர்கள்  வெற்றி பெற்றுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

இந்நிலையில் தேசிய திறனறிவு தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு கொண்ட மாணவர்களை பாராட்டி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார் சூரி. மேலும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசும் கலந்து கொண்டவர்களுக்கு பொருள் பரிசு. ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வெள்ளி பரிசும் வழங்கி கௌரவித்திருக்கிறார். இந்த பரிசுகளை தனது நண்பர்கள் மூலமாக அந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் படி செய்திருக்கிறார் சூரி.

விரைவிலேயே அந்த மாணவர்களை சந்திக்க வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரது நண்பரும் இயக்குனரான இரா. சரவணன்  சூரியைப் பார்த்து இவ்வளவு வேலைப்பளுவிற்கு நடுவிலும் மெனக்கெடுறீங்களே அண்ணே என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்துள்ள சூரி நாலு வார்த்தை பேசுவதால் நாம் குறைந்து விட மாட்டோம் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஒருவரை பாராட்டுவது அவர்களுடைய திறமையை இன்னும் வெளி கொண்டு வர உதவும் எனவும் அது ஒரு ஊக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார் சூரி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soori gave prizes to thegovt school students who won the prize in aptitude dress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->