வைரலாகும் சிவகார்த்திகேயன் லுக்,,தோளில் மஞ்சள் துண்டு..எஸ்கே என்ன கலைஞர் கருணாநிதியா?
Sivakarthikeyan look goes viral yellow piece on shoulder Is SK Karunanidhi the artist
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், முதலில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஜனவரி 10ஆம் தேதியே படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. படத்தை முன்கூட்டியே சிலர் பார்த்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களிடமிருந்து படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
‘சூரரைப் போற்று’ என்ற மெகா வெற்றிக்கு பிறகு, சுதா கொங்கரா சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக சூர்யா படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, இயக்குநர் மொத்த காஸ்ட்டிங்கையும் மாற்றினார். அதன் அடிப்படையில்,
-
சூர்யாவுக்கு பதில் – சிவகார்த்திகேயன்,
-
துல்கருக்கு பதில் – அதர்வா,
-
விஜய் வர்மாவுக்கு பதில் – ரவி மோகன் (ஜெயம் ரவி),
-
நஸ்ரியாவுக்கு பதில் – ஸ்ரீலீலா
என்று புதிய நட்சத்திர பட்டியல் உருவானது.
‘பராசக்தி’ படத்தின் கதை, ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, சகோதர பாசம் உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான அம்சங்களும் கதையில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்சேஷனலான இந்த கதையை வலுவான திரைக்கதையுடன் சொல்லியிருப்பதால், சமூக அளவில் பெரிய விவாதங்களை கிளப்பும் படம் ஆக ‘பராசக்தி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சிவகார்த்திகேயனின் 25ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 10ஆம் தேதி ‘பராசக்தி’ வெளியாகும் நிலையில், அதற்கு முந்தைய நாள் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படமும் ரிலீஸாகிறது. இதனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘பராசக்தி Vs ஜனநாயகன்’ என்ற சினிமா போட்டி உருவாகியுள்ளது. படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் ‘பராசக்தி’யை பார்த்துவிட்டதாகவும், படம் வெகுவாக கொண்டாடத்தக்க வகையில் இருப்பதாகவும், இது சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா இருவரின் கரியரிலும் முக்கிய இடம் பெறும் படம் எனவும் உறுதியாக கூறி வருகின்றனர்.
இந்த படம் 1960-களில் நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது. அதனால் நடிகர்களின் லுக், கதை நடக்கும் லொக்கேஷன்கள், செட்டுகள் என அனைத்திலும் படக்குழு மிகுந்த கவனம் செலுத்தி உழைத்திருப்பது ‘World of Parasakthi’ வீடியோவில் தெளிவாக தெரிந்தது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் கருப்பு சட்டை அணிந்து, தோளில் மஞ்சள் துண்டுடன் இருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த லுக், எஸ்கே ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், “கருப்பு சட்டை, மஞ்சள் துண்டு – இதைப் பார்க்கையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவுக்கு வருகிறது” என சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இதுகுறித்து மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகவும், உண்மையில் சிவகார்த்திகேயன் மஞ்சள் துண்டு அல்ல, ப்ரவுன் நிற சால்வைதான் அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. வேண்டுமென்றே சிவகார்த்திகேயனை டார்கெட் செய்ய ஒரு தரப்பினர் இப்படியான புகைப்படத்தை பரப்பியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
மொத்தத்தில், ரிலீஸுக்கு முன்பே பேசுபொருளாக மாறியுள்ள ‘பராசக்தி’, உள்ளடக்கம், அரசியல் பின்னணி, சிவகார்த்திகேயனின் புதிய லுக் ஆகியவற்றால், இந்த பொங்கல் சீசனில் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக மாறும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Sivakarthikeyan look goes viral yellow piece on shoulder Is SK Karunanidhi the artist