அடுத்தடுத்த வெற்றிக்கு பின், சிம்பு எடுத்த உறுதியான முடிவு.! கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.  தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல திரைப்படம் வருகின்ற 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெளியாகவுள்ள 'பத்து தல' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தற்போது சிம்பு தனது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் என ஆர்வமுடன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். பத்து தல திரைப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்படும்  மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தத் திரைப்படம் தான் சிம்புவின் சினிமா கேரியரிலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகும் படம் என சினிமா மாவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக சிம்பு முடிவு செய்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன், சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் சிம்பு 'பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன்' என கூறிவிட்டாராம். இதனால் கமல்ஹாசனின் படத்திற்கு பிறகு சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே பெரிய பட்ஜெட் கதைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu will only act in high budget movies after raj kamal production film


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->