''சித்தார்த் 40'' திரைப்படத்தின் நியூ அப்டேட்! வைரல் போஸ்டர்கள்.!
Siddharth Movie New Update
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுள்ள அகில் அறிமுகமானவர் சித்தார்த். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சித்தார்த் ''மிஸ் யூ'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா அச்சர் உள்ளிட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக பட குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.

மேலும் தேவயானி மற்றும் சரத்குமார் நடிப்பில் 1990 இல் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Siddharth Movie New Update