"எல்லாமே எங்களுக்கு ப்ரோமோஷன் தான்", பத்திரிக்கையாளர் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து தள்ளிய சாந்தனு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் . இவர் சக்கரைக்கட்டி திரைப்படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஆயிரம் விளக்கு, கண்டேன், சித்து பிளஸ் 2 ஆகிய திரைப்படங்களும் தோல்வியை தழுவின.

நீண்ட நாட்களுக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு வெளியான பாவ கதைகள் என்ற இணையதள தொடரில் இவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து  மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது மதயானை கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இராவண கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதனை பயங்கரமாக கலாய்த்து இருக்கின்றனர் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மற்றும் சாந்தனு.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதன், பாக்கியராஜ் ஏன் இதற்கு வரவில்லை என கேட்டு இருக்கிறார்.? அதற்கு பதிலளித்த சாந்தனு அவர்  ஊரில் இல்லை மேலும் அவர் இந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை அவர் இதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என பதில் கேள்வி கேட்டார். இதற்கு என்ன தலைப்பு வைத்து உங்கள் சேனலில் வெளியிட இருக்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன பேசினாலும் எங்களது படத்திற்கு பிரமோஷன் தான் அதனால் தைரியமாக பேசுங்கள் என கலாய்த்து தள்ளி இருக்கிறார் சாந்தனு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shantanu make mockery of bailwan Ranganathan at Ravanakottam press conference


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->