Va Varalam Va | நட்சத்திர பட்டாளங்களுடன், தேவா இசையில் உருவாகிறது  "வா வரலாம் வா"  - Seithipunal
Seithipunal


பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளி குழந்தைகளை கடத்திய நாயகனும் அவனது நண்பனும், அதில் வெற்றி பெற்று பணக்காரர்களாக உயர்ந்தார்களா? இல்லையா? என்பதை முழு நகைச்சுவையுடன் கூறுவதே "வா வரலாம் வா" என்கின்றனர் இயக்குனர்கள் எல்.ஜி.ரவிசந்தர் - எஸ்.பி.ஆர்.

எஸ்.ஜி.எஸ்.கிரியேட்டிவ் மீடியா எஸ்.பி.ஆர் தயாரிக்க எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்.பி.ஆர் இணைந்து இயக்குகிறார்கள். முன்னதாக மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கியவர் எல்.ஜி.ரவிசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொன்றால் பாவம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், பயமா இருக்கு, இரும்பு மனிதன், நான் அவளை சந்தித்தபோது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த பவ்யா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். முதன்மை காமெடியனாக ரெடின் கிங்ஸ்லீ நடிக்க, வில்லனாக "மைம்" கோபி நடிக்கிறார். படத்தில் சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, பிரபாகரன், ராமசாமி, மீசை ராஜேந்திரநாத், வடிவேல் பீட்டர் ஆகியோர் நடிக்கின்றனர்.

தேவா இசையமைக்க காதல்மதி, கானா எட்வின் பாடல்கள் எழுதியுள்ளனர். முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு பணியாற்றிய கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். எஸ்.பி.ஆர்,  தயாரிப்பதுடன் எல்.ஜி.ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தினை இயக்கவும் செய்கிறார். கதை திரைக்கதை வசனம் உள்ளிட்டவைகளை எல்.ஜி. ரவிசந்தர் கவனித்துக் கொள்கிறார். 

சுமார் 450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் தேவா, இப்படத்திற்காக கானா பாடல், காதல் பாடல் குழந்தைகளுக்கான நகைச்சுவை பாடல் என ஒவ்வொரு விதமாக நான்கு பாடல்களை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தில் வரும் பாடல்கள் ஆல்பம் ஹிட் என்பதில் சந்தேகமே வேண்டாம் என்கிறார்கள் படக்குழுவினர். 

சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், வேடவாக்கம் வேடந்தாங்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பாக நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sgs creative media production no1 va varalam va music by Deva


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->