ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை திரைப்படங்களை உதறிய ரோஷினி.! கண்ணம்மா இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ரோஷினி ஹரி பிரியன். இவர் நிறைய யூ ட்யூப் குறும் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய புகழடைந்தார். 

இந்த சீரியலில் இருந்து திடீரென்று அவர் விலகினார் இதற்கு காரணம் தெரியாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக சீரியல் ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் இதனால்தான் ரோஷினி சீரியலில் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் கோலிவுட்டின் மிக முக்கிய இரண்டு திரைப்படங்களை அவர் மிஸ் பண்ணியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் சூர்யா நடித்து தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அப்போது அவர் சீரியலில் பிசியாக நடித்து வந்ததால் இந்த கதாபாத்திரத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. 

அத்துடன் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கண்ணம்மா அழைக்கப்பட்டுள்ளார். அப்பொழுதும் சீரியலில் பிசியாக இருந்த ரோஷினி அந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணி விட்டார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ரோஷனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த பட வாய்ப்புகளை அவர் மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக ரோஷினி உருவெடுத்து இருப்பார் என்றால் அது மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Roshini missed movies list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->